கடம்பூரில் மகன் திட்டியதால் பிளம்பர் தற்கொலை


கடம்பூரில் மகன் திட்டியதால் பிளம்பர் தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2019 3:42 AM IST (Updated: 21 July 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் ஏரி சிவன் கோவில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் ஞானபாலன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பிருந்தாவனம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஞானபாலன்(வயது 45). பிளம்பர். நேற்று முன்தினம் காலை இவருக்கும் இவரது மகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானபாலன் வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் நேற்று கடம்பூர் ஏரி சிவன் கோவில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் ஞானபாலன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story