காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் நிஜாம் அகமது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் என்.பி.எஸ். ராஜசேகர் வரவேற்றார். திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் பொன்.த. மனோகரன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் என். ஆர். ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஜே. சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
எம்.ரெங்கசாமியை மாநில துணை பொதுச்செயலாளராக அறிவித்த பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிப்பது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தாமல் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஆடுதுறை பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இன்னல்களை அனுபவித்து வருவதால் வீரசோழன் ஆற்று பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் கூட்டம் நடத்தி கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆடுதுறை பேரூர் செயலாளர் காமேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story