மருதமலை அடிவார சுற்றுலா வாகனங்களை மலைமீது செல்ல அனுமதி அளிக்கக்கோரி டிரைவர்கள் உண்ணாவிரதம்
மருதமலை அடிவார சுற்றுலா வாகனங்களை மலைமீது செல்ல அனுமதி அளிக்கக்கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
வடவள்ளி,
கோவையில் மருதமலைசுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில்உள்ளது. இது பக்தர்களால் 7-வதுபடை வீடாகபோற்றப்படுகிறது. கோவை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.இந்த கோவிலுக்குவரும்சுற்றுலா பயணிகள்மற்றும் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து தங்களுடைய வாகனங்களில் மலை மீது உள்ள திருக்கோவிலுக்குசென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் சுற்றுலா வாகனங்களையும் மலைமீது செல்ல அனுமதி அளிக்கக்கோரிசுற்றுலா வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நேற்று காலை மருதமலை அடிவாரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள்சங்க தலைவர்மருதமலைபரமேசுவரன் கூறியதாவது:- கோவையில் இருந்து வரும் அனைத்து வகையான சுற்றுலா வாகனங்களையும் கோவில் நிர்வாகத்தினர் மலைமீதுஉள்ள கோவிலுக்கு செல்லஅனுமதி அளிக்கின்றனர். ஆனால் அடிவாரத்தில்உள்ள சுற்றுலா வாகனங்களை மட்டும் மலை மீது இயக்குவதற்கு அனுமதி தரமறுக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாகஅனுமதி கேட்டும் எவ்வித பதிலும்தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டுள்ளோம். அடிவாரத்தில்உள்ள சுற்றுலா வாகனங்களை இயக்குவதற்கான அனுமதி அளிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story