சோழவந்தான் அருகே 50 மூடை மணலுடன் பெண்கள் உள்பட 3 பேர் கைது


சோழவந்தான் அருகே 50 மூடை மணலுடன் பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே 50 மூடை மணலுடன் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு பிரிவு வைகை ஆற்று பகுதியில் சாக்குகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜிகணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த 3 பேரையும் பிடித்து 50 மூடை மணலை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்தபோது திருவேடகம் காலனியைச் சேர்ந்த துர்க்காதேவி (வயது40), ஆலப்பன்(44),ஜெனகை (22) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

50 மூடை சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Next Story