திருக்கோவிலூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி தொட்டி போராட்டம்
திருக்கோவிலூர் அருகே ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கஞ்சி தொட்டி போராட்டம் நடத்தினர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி, ஒட்டம்பட்டு, அருணாபுரம், கல்லந்தல், தண்டரை, நாயனூர், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும். வீரபாண்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளை மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை திறக்கவேண்டும். கொடுக்கம்பட்டு- வசந்தகிருஷ்ணாபுரம் துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவேண்டும்.
ஏரி, குளங்களை தூர்வாருவதோடு, பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரபாண்டி ஊராட்சி அலுவலகம் முன்பு கஞ்சி தொட்டி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, செந்தில்முருகன், ஏ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில், வட்ட செயலாளர்கள் கண்டாச்சிபுரம் முத்துவேல், திருக்கோவிலூர் தாண்டவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story