பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் வழங்கினர்
திருவள்ளூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் வழங்கினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், பொன்னேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிறுணியம் பி.பலராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பெஞ்சமின், மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கீழ்மணம்பேடு, பூந்தமல்லி, திருமழிசை, குருவாயல், சென்னீர்குப்பம், வெங்கல், குத்தம்பாக்கம், காக்களூர், செவ்வாப்பேட்டை, கோலப்பஞ்சேரி என 14 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3 ஆயிரத்து 95 பேருக்கு அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினர்.

Related Tags :
Next Story