வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்


வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 July 2019 4:54 AM IST (Updated: 23 July 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனை அகற்றி, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியில் சுமார் 55 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏரியில், சுமார் 21 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனை அகற்றி, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் வேளச்சேரி ஏரியில் மழைநீரை சேமிக்கும் வகையில் பின்லாந்து நாட்டில் இருந்து வாங்கிய மிதவை எந்திரத்தின் உதவியுடன் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியை சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல செயற்பொறியாளர் ஆர்.முரளி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த மிதவை எந்திரம் மூலமாக 15 நாட்களில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகள் முழுமையாக அகற்றப்படும். இதன் மூலம் ஏரியில் மழைநீரை முழுமையாக சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story