திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி மீது மினிவேன் மோதல் சாலையில் கொட்டி வீணான பால்
திருவொற்றியூரில் உள்ள பால் ஏஜென்சிக்கு நேற்று காலை மினிவேனில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து திருவொற்றியூரில் உள்ள பால் ஏஜென்சிக்கு நேற்று காலை மினிவேனில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டது. எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை மினிவேன் டிரைவர் முந்திச்செல்ல முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினிவேனில் இருந்த கன்டெய்னர் பெட்டி சேதம் அடைந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பால் பாக்கெட்டுகள் உடைந்து சாலையில் கொட்டி பால் முழுவதும் வீணானது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான மினிவேனை, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் சாலையில் கொட்டிக்கிடந்த பால் பாக்கெட்டுகளையும் அகற்றினர். இதனால் எண்ணூர் விரைவு சாலையில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story