பெண் புகார் கொடுத்த விவகாரம்: சொத்தில் பங்கு கொடுக்காததே காரணம் - போலீஸ் இன்ஸ்பெக்டர் பேட்டி
பெண் புகார் கொடுத்த விவகாரத்தில் சொத்தில் பங்கு கொடுக்காததே காரணம் என்று வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறினார்.
வீரபாண்டி,
திருப்பூர் மாநகர போலீசில் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் குறித்து திருப்பூர் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறியதாவது:-
நான் கோவையில் பணியாற்றினேன். அப்போது குடும்பத்தோடு காரில் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றோம். பின்னர் அதே காரில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் வந்த கார் சிறுமுகை அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எனது மனைவி உள்பட 7 பேர் இறந்தனர். என்னுடைய மகன் அபிஷேக் மட்டும் உயிர் தப்பினான். இதனால் நானும், எனது மகனும் கோவையில் வசித்து வந்தோம். அதன்பின்னர் என்னை திருச்சிக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு நான் பணியில் இருக்கும்போது வழக்கு ஒன்றில் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்தான் பிரதீமா (32) என்ற பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அந்த பெண் என்னை அணுகி தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், தனது கணவர் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார். முதலில் இப்படித்தான் அந்த பெண் என்னுடன் பழக்கமானார். அதன்பின்னர் நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். இதற்கிடையில் நான் ஈரோட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். அப்போது அந்த பெண்ணும் தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு ஈரோட்டிற்கு வந்து விட்டார். பின்னர் ஈரோட்டில் ஒரு வீடு பார்த்து அவரை தங்க வைத்தேன்.
என்னுடைய சொந்த ஊர் வெள்ளகோவில் என்பதால் அந்த பெண்ணை வெள்ளகோவிலுக்கு அழைத்து சென்று எனது உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களுக்கும் அந்த பெண்ணை பிடித்து விட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் நாங்கள் சேர்ந்து குடும்பம் நடத்தினோம். இந்த நிலையில்தான் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். பின்னர் வீட்டையும் வீரபாண்டி பகுதிக்கு இடமாற்றம் செய்தேன்.
அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லை. இதை நான் பலமுறை கண்டித்தேன். ஆனாலும் அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த பெண்ணுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் கோபித்துக்கொண்டு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு நான் பணிக்கு வந்து விட்டேன். அப்போது அந்த பெண் என்னுடைய வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த 55½ பவுன் நகை மற்றும் ஆவணங்களை எடுத்து சென்று விட்டார். அதன்பின்னர் என்னிடம் ரூ.1 கோடியும், சொத்தில் பங்கும் கேட்கிறார். நான் கொடுக்க மறுத்ததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறினார்.

Related Tags :
Next Story