மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன். இவர் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் போராட்டமும் நடத்தினர். எனினும், இதுவரை பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவில்லை.
இதனால் நேற்று மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட இணை செயலாளர் ஆரோக்கியஜார்ஜ் தலைமையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் கையெழுத்திட்டு அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகுடபதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார தலைவர் ராஜ்மோகன் தலைமையில், செயலாளர் சின்னராஜா மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார தலைவர் வசந்தா தலைமையில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றி அலுவலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story