பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை; உடல் நலக்குறைவால் விபரீத முடிவு
சென்னை பட்டினம்பாக்கத்தில் வீட்டில் தூக்குப்போட்டு பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.
அடையாறு,
சென்னை பட்டினம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் உமாலட்சுமி (வயது 43). இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு பிளஸ்-1 படிக்கும் மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் பணி முடித்து வீட்டிற்கு வந்த உமாலட்சுமி, திடீரென்று தனது அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, உமாலட்சுமியின் தந்தை வீட்டிற்கு வந்த பார்த்த போது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்த போது, உமாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், பட்டினம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் பீர் பாஷா, முருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், தற்கொலை செய்து கொண்ட உமாலட்சுமியின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இடுப்பு மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உடல்நலப்பிரச்சினையில் உமாலட்சுமி அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மயிலாப்பூர் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மற்றும் இணை கமிஷனர் சுதர்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த உமாலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story