கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி ஊர்வலமாக சென்று போலீசிடம் மனு


கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி ஊர்வலமாக சென்று போலீசிடம் மனு
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய கோரியும், பொதுமக்கள் ஊர்வலமாக சென்று போலீசிடம் மனு அளித்தனர்.

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் கருமாரியம்மன் கோவில் நகர் உள்ளது. இங்கு 6-க்கும் மேற்பட்ட தெருக்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சாலைகள் சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுஅளித்தும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று கருமாரியம்மன் கோவில் தெருவில் இருந்து, ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று, சாலையை சீர் செய்யவும், கழிவுநீர் அடைப்பை சரி செய்யவும் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story