கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்குள் நுழைய முயன்ற இளைஞர் காங்கிரசாரால் பரபரப்பு


கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்குள் நுழைய முயன்ற இளைஞர் காங்கிரசாரால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 July 2019 4:14 AM IST (Updated: 24 July 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியிருக்கிறார்கள்.

மும்பை, 

முதலில் அவர்கள் பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ‘சோபிடெல்' என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். பின்னர் பவாயில் உள்ள ‘ரெனைசன்ஸ்' என்ற நட்சத்திர ஓட்டலுக்கு மாறினார்கள். அந்த ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

அண்மையில் ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வந்த கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓட்டலுக்குள் செல்ல முயன்ற அவரை போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் அவர் அதிரடியாக கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பபட்டார். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ள நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து மும்பையில் தங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று மும்பை இளைஞர் காங்கிரசார் அந்த ஓட்டல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது திடீரென அவர்கள் அந்த ஓட்டலுக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.

இதற்கிடையே நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story