மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் 29-ந் தேதி தொடங்குகிறது
மராட்டியத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன.
மும்பை,
காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் பணி அக்கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் ஜூலை 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக கட்சியின் மாநில தலைவர் பாலாசாகேப் தோரட் மாவட்ட வாரியாக 2 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.இவர்கள் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடத்தி அறிக்கையை மாநில தலைமையிடம் சமர்ப்பிப்பார்கள்.
இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட 800 முதல் 900 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளன.
Related Tags :
Next Story