மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்டவேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
மராட்டியத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்டவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மரத்வாடா மண்டலத்தில் ஜல்னா, அவுரங்காபாத்,பர்பானி, ஹிங்கோலி,நாந்தெட், லாத்தூர், உஸ்மனாபாத், பீட் ஆகிய 8 மாவட்டங்க ளில்தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது.
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் இங்குள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டு தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன.
கடந்த ஆண்டு மராட்டிய அரசு 151 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் இந்த மாவட்டங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 2 ஆயிரத்து 200 தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் நீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் நேற்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
ஜூலை மாதம் முடியவுள்ள நிலையில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லை. நடவு பணிகள் 50 சதவீதம் கூட நடைபெறவில்லை. இந்த மோசமான நிலை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க அரசு 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்டவேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் 30 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை பலன்பெற வில்லை. பருத்தி உற்பத்தி அதிகம் நடைபெறும் விதர்பாவில் இதுவரை சராசரி மழைப்பொழிவு அளவில் 30 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது.
இதே மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய நகரான நாக்பூரில் குடிநீர் வெட்டு நிலவுகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.. விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கிடைக்கவில்லை.
இ்வ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story