நாங்கள் நினைத்தது நடந்துள்ளது ; அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் சொல்கிறார்


நாங்கள் நினைத்தது நடந்துள்ளது ; அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 July 2019 5:29 AM IST (Updated: 24 July 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த எச்.விஸ்வநாத் உள்பட 13 பேர் மும்பை ஓட்டலில் முகாமிட்டு இருந்தனர்.

பெங்களூரு, 

கடந்த 2 நாட்களாக அவர்கள் மும்பை ஓட்டலில் இருந்து சென்று விட்டதாக கூறப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நேற்று கூட்டணி அரசு தோல்வி அடைந்ததை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைந்து, பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் கூட்டணி அரசு இருக்க கூடாது என்று ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் விரும்பினோம். நாங்கள் நினைத்தது நடந்துள்ளது. கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கவில்லை. இதனால் கூட்டணி அரசின் மீதான அதிருப்தியால் ராஜினாமா செய்தோம். தற்போது நாங்கள் புனேயில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கிறோம்.

எங்களது அடுத்தக்கட்ட முடிவு குறித்து மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசிப்போம். பின்னர் எங்களது முடிவை அறிவிப்போம். எம்.எல்.ஏ. பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளோம். கட்சியை விட்டு விலகவில்லை. அதனால் பா.ஜனதாவில் சேருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்திருப்பதால் நாங்கள் அனைவரும் நாளை(அதாவது இன்று) பெங்களூருவுக்கு திரும்ப இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story