வானவில் : மடக்கும் வகையிலான ரோபோடிக் டிரோன்
குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் டிரோன்கள் இப்போது பலவித பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆடெல் ரோபாடிக் இவோ எனும் டிரோன் மடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எளிதில் எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் 4கே 60எப்.பி.எஸ். அல்ட்ரா ஹெச்.டி. வீடியோ எடுக்கமுடியும். இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் எத்தகைய கேமராவையும் வைக்க முடியும். இதில் டியூயல் ஜி.பி.எஸ்., குளோநாஸ் பொசிஷனிங் வசதி உள்ளது. இந்த ரோபோ எதிரில் தடை தட்டுப்பட்டால் அதில் மோதாது.
இதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். இது 3.3 அங்குல தொடு திரையுடன் உள்ளது. 4.3 மைல் தூரத்தில் இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியும். மொபைல் டிவைஸ் இணைப்பு இல்லாவிட்டாலும் இதைக்கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. நேவிகேஷன் சக்கரத்தின் வலது புறம் நகர்த்தினால் கேமராவின் கோணம் மாறும். வீடியோ காட்சிகள் மட்டும் போதுமானால் குறிப்பிட்ட பகுதியில் பறக்கவிட்டு படங்களை எடுத்துவிட்டு ரோபோவை உங்கள் இடத்துக்கு அழைத்துக் கொள்ளலாம்.
Related Tags :
Next Story