வானவில் : வயர்லெஸ் கீ-போர்டு


வானவில் : வயர்லெஸ் கீ-போர்டு
x
தினத்தந்தி 24 July 2019 1:01 PM IST (Updated: 24 July 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

ஜெல்லி கோம்ப் நிறுவனத்தின் கீ போர்டு மடக்கும் வகையில் இருப்பதால் இதை எடுத்துச் செல்வது எளிது.

கம்ப்யூட்டர் கீ-போர்டுகள் பல வகையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் நமக்கு வசதியாக இருப்பதில்லை. காரணம் அவை ஒரே அளவினதாக, வழக்கமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதனாலேயே பலரும் லேப்டாப் உபயோகத்தின்போது கஷ்டப்பட்டாவது லேப் டாப் கீ போர்டை கைகளை தள்ளி வைத்து டைப் செய்து கொண்டிருப்பர். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிப்பதாக வந்துள்ளது ஜெல்லி கோம்ப் நிறுவனத்தின் கீ போர்டு.

இது மடக்கும் வகையில் இருப்பதால் இதை எடுத்துச் செல்வது எளிது. அனைத்துக்கும் மேலாக இதற்கு வயர் தேவை இல்லை. புளூடூத் மூலம் செயல்படுவது மேலும் சிறப்பு அம்சமாகும். இது உலோகம் மற்றும் பாலிமர் கலந்த கலவையால் ஆனது. இதனால் இது நீடித்து உழைக்கும், அதே சமயம் எடை குறைவானது. ஸ்மார்ட் போனில் தகவல்களை டைப் செய்ய இதைப் பயன்படுத்தலாம். லேப்டாப், டேப்லெட் போன்றவற்றுக்கும் ஏற்றது. இதில் ஒரு யு.எஸ்.பி. இணைப்பில் லேப்டாப் மற்றும் மவுஸையும் பயன்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.2,800.

Next Story