வானவில் : டி.சி.எல்.லின் 55 அங்குல ஸ்மார்ட் எல்.இ.டி.
மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டி.சி.எல். நிறுவனம் 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது.
செயற்கை தொழில்நுட்பத்திலான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் டி.வி.யாக இது வந்துள்ளது. இதன் விலை ரூ.40,990 ஆகும். ஸ்மார்ட் டி.வி.க்களுக்கு உரிய பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் உள்ளன. செயலிகள் (ஆப்ஸ்), நெட்பிளிக்ஸ், யூ-டியூப், கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல வசதிகளை இதில் பெறலாம்.
பி8.இ.கே. என்ற பெயரிலான இந்த டி.வி.யை அமேசான் இணையதளம் மூலம் வாங்கலாம். இந்த டி.வி.யில் முக்கிய சிறப்பம்சமாகக் கூறப்படுவது வாடிக்கையாளரின் குரல் வழி கட்டளைகளைக் கேட்டு செயல்படுவதாகும். தூரத்தில் இருந்தாலும் குரல் உத்தரவுகளுக்கேற்ப இது செயல்படும். இதில் குவாட்கோர் சி.பி.யு., 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் உள்ளது.
செயற்கை நுட்பம் உள்ளதால் இதில் படங்களைப் பார்ப்பது மேம்பட்டதாக இருக்கும். மேலும் அறையின் வெளிச்சத்துக்கேற்ப இதன் ஒளி அமைப்பு மாறும் தன்மை கொண்டது. அந்த அளவுக்கு இதில் செயற்கை நுட்பம் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 30 வாட் ஸ்பீக்கர் இருப்பது மிகச் சிறப்பான இசையைக் கேட்கவும் உதவுகிறது. குறைந்த விலையில் 55 அங்குல டி.சி.எல்.லின் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.
Related Tags :
Next Story