வானவில் : பிளாபுங்க்ட்டின் கியூலெட் ஸ்மார்ட் டி.வி.
ஜெர்மனியைச் சேர்ந்த பிளாபுங்க்ட் நிறுவனம் 55 அங்குல கியூலெட் நுட்பத்திலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பிளாபுங்க்ட் நிறுவனம் 55 அங்குல கியூலெட் நுட்பத்திலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 7.0 நேகேட் இயங்கு தளம் உள்ளது. கோர்டெக்ஸ் ஏ73 பிராசஸர் உள்ளது. அழகிய வடிவமைப்பாக இதில் மெட்டாலிக் பிரேம் உள்ளது. இதன் தடிமன் 7.9 மி.மீ மட்டுமே. குரல் வழி உத்தரவுகளைக் கேட்டு செயல்படும் ஸ்மார்ட் மவுஸ் ரிமோட் இதில் உள்ளது. இதில் பில்ட்இன் வை-பை இருப்பது சிறப்பாகும். இதன் விலை சுமார் முரூ.69,999. இதை அமேசான் இணையதளம் மூலம் வாங்கலாம்.
இது தவிர, கடன் அட்டையில் சுலப தவணை திட்டங்களும் கூடுதல் தொகையின்றி செலுத்தும் வசதியும் அளிக்கப்படுகிறது. காட்சிகளை கண்களுக்கு உறுத்தல் இல்லாத வகையில் பார்த்து மகிழ முடியும். மேலும் துல்லியமான இசைக்கு டால்பி டிஜிட்டல் டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம் உள்ளது. சற்று விலை அதிகமான ஸ்மார்ட் டி.வி.க்களை வாங்க விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.
Related Tags :
Next Story