வானவில் : கேமிங் லேப் டாப் ரேஸர் பிளேடு புரோ 17
இன்றைய குழந்தைகளின் உலகமே வேறு.
அந்தக்காலத்தில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் விளையாட்டு மைதானத்தில் அதிக நேரம் விளையாடுவர். மாலை மங்கி இருள் கவியும் நேரம் வீடு திரும்புவர். ஆனால் இன்றைய ஸ்மார்ட் உலகில் குழந்தைகளின் விளையாட்டுகளும் ஸ்மார்ட்டாக உள்ளன. அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வீடியோ கேம் விளையாட்டுகள் வந்துவிட்டன. தத்ரூபமாக போர் முனையில் சண்டை புரிவது, சாகசமாக கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுவது ஆகிய சாகசங்கள் அனைத்தையும் சிறுவர்கள் தங்கள் வீடியோ கேமிலேயே விளையாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில் கேமிங் பிரியர்களுக்காக வந்துள்ளதுதான் ரேஸர் பிளேடு. இதன் திரை 17 அங்குலமா கும். ஏற்கனவே இந்நிறுவனத்தின் 15 அங்குல மற்றும் 13 அங் குல திரைகள் கொண்ட லேப் டாப்புகள் மிகவும் பிரசித்தம். உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இரண்டு ஆண்டுகளாக எவ்வித புதிய தயாரிப்பையும் அறிமுகப்படுத்தாத இந் நிறுவனம் தற்போது 17 அங்குல புரோ மாடல் லேப் டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள கிராபிக் கார்டு மிகச் சிறப்பானதாகும். அத்துடன் மிகச் சிறந்த கேமிங் லேப்டாப்பாகவும் இது திகழ்கிறது. இதேபோல கம்ப்யூட்டர் சார்ந்த விளையாட்டுகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இதில் இன்டெல் கோர் 8-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ79750பி 6 கோர் பிராசஸர் உள்ளது. இதில் டியூயல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 512 ஜி.பி. நினைவக வசதி மற்றும்+ 2 டி.பி. ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது மிகச் சிறிய, எடுத்துச் செல்லும் வகையில், நீடித்து உழைக்கும் சி.என்.சி. அலுமினியம் மேற்பகுதியைக் கொண்டுள்ளது.
இதில் கிகாபைட், எதெர்நெட், 3 எக்ஸ் யு.எஸ்.பி. 3.2, தன்டர்போல்ட் 3 (யு.எஸ்.பி.சி.), மினி டிஸ்பிளே போர்ட், ஹெட்செட் ஜாக் 2.5 ஆகியன உள்ளது. ஆனால் இதன் விலைதான் மிக மிக அதிகம். விலை சுமார் ரூ.3.20 லட்சமாகும். ஆனால் உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்கள் எவ்வளவு விலை கொடுத்தும் இத்தகைய கேட்ஜெட்களை வாங்கத் தயாராக உள்ளனர்.
Related Tags :
Next Story