வானவில் : வந்துவிட்டது ரெட் மி கே 20


வானவில் : வந்துவிட்டது ரெட் மி கே 20
x
தினத்தந்தி 24 July 2019 1:15 PM IST (Updated: 24 July 2019 1:15 PM IST)
t-max-icont-min-icon

ஜியோமி நிறுவனம் பிரீமியம் ஸ்மார்ட்போனாக ரெட் மி கே 20 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரெட் மி கே 20 6.39 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இந்த திரையிலேயே விரல் ரேகை பதிவு உணர் சென்சார் உள்ளது. இது 7-வது தலைமுறை ஆப்டிகல் இன் டிஸ்பிளே சென்சார் வகையைச் சேர்ந்ததாகும். இதில் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் செல்பி படம் எடுக்க வசதியாக பாப்அப் மாடல் முன்புற கேமரா உள்ளது. இது 20 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. இது 730 ஸ்னாப்டிராகன் பிராசஸரைக் கொண்டது. 6 ஜி.பி. ரேம் உள்ள இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் செயல்பட வசதியாக இருக்கும். ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்கு தளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் போடும் வசதி உள்ளது. இது கார்பன் பிளாக், பிளேம் ரெட், கிளேசியர் புளூ ஆகிய நிறங்களில் வந்துள்ளது.

Next Story