கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டிய வாலிபர் கைது


கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 July 2019 4:45 AM IST (Updated: 25 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்,

கம்பத்தில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்திற்குள் கடந்த 18-ந்தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் கம்பம் கிழக்கு வனச்சரகர் ஜீவானா உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் பெத்தனசாமி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் தலைமையில் போலீசார் மரம் வெட்டுபவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த பட்டியலில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என தெரிய வந்தது.

இதையடுத்து கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் என்னும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது 32) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story