தாளவாடி அருகே பரபரப்பு; ஆசனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
தாளவாடி அருகே உள்ள ஆசனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ. பில்.எல்.சுந்தரம் தலைமையில் ஆசனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று காலை 10.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேம் குமார் மற்றும் தாளவாடி போலீசார் அங்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், ‘ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கப்படவில்லை. மேலும், எங்களுக்கு வேலை செய்தற்கான ஊதியத்தை வேலை முடிந்தவுடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர்.
அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேம்குமார், தொழிலாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மதியம் 12.30 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Related Tags :
Next Story