திருப்பரங்குன்றம் அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
திருப்பரங்குன்றம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தனக்கன்குளம் பாரதி நகரில் கீழக்குயில்குடி சந்திப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் ராட்சத குழாய் பூமிக்கடியில் செல்கிறது. இந்த ராட்சத குழாய் தனக்கன்குளம் மொட்ட மலை டீச்சர் காலனி அருகில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது. அங்கு அமைந்துள்ள ராட்சத தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மின் மோட்டாரை இயக்கி தெருக்குழாய்கள் மூலமாக தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர், பி.ஆர்.சி. காலனி மற்றும் திருநகர் பகுதியில் வசித்து வரும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனக்கன்குளம் பாரதி நகர் சந்திப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்து குழாயில் தண்ணீர் கசிந்தது. அதை உடனடியாக சரிசெய்யுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த பகுதியில் அதிகஅளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் அதன் அதிர்வில் குழாய் மேலும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து பெரியபள்ளம் உருவாகி குடிநீர் பெருக்கெடுத்து குளமாக மாறி தண்ணீர் தேங்கி உள்ளது. இதேநிலை பல மாதங்களாக தொடர்ந்து நீடித்ததால் அந்த பகுதியில் தற்போது காவிரிகூட்டுக் குடிநீர் ஆறாக ஓடி யாருக்கும் பயன்படாமல் வீணாகி வருகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிதண்ணீர் வீணாகாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். தனக்கன்குளம் பாரதிநகர் மக்களுக்காக தரைமட்ட தொட்டி கட்டி குழாய் அமைத்து தண்ணீரை வீணாகாமல் பயன்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story