பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் குற்றங்களை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு துரை பேச்சு
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் குற்றங்களை தடுக்க முடியும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கலந்துரையாடல் விழிப்புணர்்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசார், மக்களின் நண்பன் என்பதை அனைவரும் உணர வேண்டும். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நட்புறவு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுத்திட குடியிருப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராவை அவசியம் பொருத்த வேண்டும்.
குற்றங்களை தடுக்க முடியும்
மோட்டார் சைக்கிளில் ஏற்படும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுத்திட அனைவரும் தலைகவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் குற்றங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை போலீஸ் சூப்பி்ரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன் (தாலுகா), ராணி (மகளிர்), செந்தில்குமார் (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர் சத்யா, கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story