தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 July 2019 3:45 AM IST (Updated: 25 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த எருமையூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி கஜவல்லி. சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் ராகுல் (வயது 14).

இவர் எருமையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் ராகுல் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். இதை ராகுலின் தாய் கண்டித்தார்.

இதில் மனவருத்தத்தில் இருந்த ராகுல் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story