திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
திருத்தணி,
திருத்தணியில் உள்ள சித்தூர் சாலை குண்டுலூர் பகுதியை சேர்ந்தவர் கபாலீஸ்வரன் (வயது 34). இவர் நேற்றுமுன்தினம் இரவு சொந்தவேலை காரணமாக வெளியில் சென்று விட்டு திருத்தணி பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியை சேர்நதவர் வெங்கடேசன் (வயது 25).
இவர் திருத்தணியில் தனது வேலைகளை முடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருத்தணியில் உள்ள பைபாஸ் சாலையில் வரும் போது அவர்களது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் கபாலீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.