பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 25 July 2019 3:45 AM IST (Updated: 25 July 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் லோக நாதன் (வயது 25). இவர் 16 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் திடீரென அந்த மாணவிக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவளிடம் விசாரித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

விசாரணையில், லோகநாதன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை வாலிபர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story