குலசேகரன்பட்டினம், ஓட்டப்பிடாரத்தில் மனுநீதி நாள் முகாம்
குலசேகரன்பட்டினம், ஓட்டப்பிடாரத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட 117 மனுக்களில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டது. 42 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
முகாமில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இறப்பு நிவாரண தொகை உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது. விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், உரங்கள் வழங்கப்பட்டது.
முகாமில் துணை கலெக்டர் (முத்திரை) சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலசுப் பிரமணியன், தாசில் தார்கள் தில்லைப்பாண்டி, ராஜ்குமார் ஜெயசீலன் (சமூக பாதுகாப்பு திட்டம்), மண்டல துணை தாசில்தார் கோபால், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னுலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். முகாமில் கலந்து கொண்ட மக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மொத்தம் 190 பேர் மனு கொடுத்தனர்.
முகாமில் 10 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்டவைகளை உதவி கலெக்டர் விஜயா வழங்கினார்.
முகாமில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகாமிசுந்தரி, மண்டல தாசில்தார்கள் சுப்புலட்சுமி, கண்ணன், தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் தங்கையா, வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப் பிரமணியன், ராதாமகேஸ்வரி, ராமச்சந்திரன், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story