ஆம்புலன்ஸ் வேனில் கடத்தப்பட்ட ரூ.1½ கோடி கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது


ஆம்புலன்ஸ் வேனில் கடத்தப்பட்ட ரூ.1½ கோடி கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2019 10:16 PM GMT (Updated: 24 July 2019 10:16 PM GMT)

நாக்பூர் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து மும்பை மற்றும் கோவாவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

மும்பை,

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நாக்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வேன் ஒன்று கடந்து சென்றது. ஆனால் அந்த ஆம்புலன்சில் ஒடிசா மாநில பதிவெண் இருந்ததால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் ஆம்புலன்சை விரட்டி சென்று மறித்து நிறுத்தினர்.

பின்னர் ஆம்புலன்சில் சோதனை போட்டனர். இந்த சோதனையில் ஆம்புலன்சுக்குள் ஏராளமான சாக்குமூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை திறந்து பார்த்த அதிகாரிகள், அதில் கஞ்சா போதைப்பொருள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கஞ்சா இருந்த சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவை 1,004 கிலோ எடைகொண்டதாக இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story