நாளை முதல் 15 நாட்கள் கர்ஜத்-லோனாவாலா இடையே தண்டவாள பராமரிப்பு பணி
மும்பையில் இருந்து புனே செல்லும் ரெயில்வே வழித்தடத்தில் கர்ஜத்-லோனாவாலா இடையே நாளை (வெள்ளிக் கிழமை) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
புனே,
பராமரிப்பு பணி நடைபெறும் 15 நாட்கள் மும்பை-புனே இடையே சில ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட உள்ளது. இதன்படி பிரகதி எக்ஸ்பிரஸ், கோலாப்பூர்-புனே எக்ஸ்பிரஸ் ரெயில், புனே-பன்வெல் பயணிகள் ரெயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மும்பையில் இருந்து புறப்படும் கொய்னா, சயாத்ரி எக்ஸ்பிரஸ், நாந்தெட்- பன்வெல் ஆகிய ரெயில்கள் புனேயில் இருந்து புறப்பட்டு செல்லும். புனே-புஷாவல் ரெயில் மான்மாட்டில் இருந்து இயக்கப்படும் என மத்திய ரெயில்வே வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story