பிரெஞ்சு அரசு தொடக்கப்பள்ளியை மூடக்கூடாது பிரான்ஸ் எம்.பி.யிடம் பெற்றோர்கள் வலியுறுத்தல்


பிரெஞ்சு அரசு தொடக்கப்பள்ளியை  மூடக்கூடாது பிரான்ஸ் எம்.பி.யிடம் பெற்றோர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2019 5:15 AM IST (Updated: 25 July 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தெய்தா வீதியில், கடந்த பல ஆண்டுகளாக பிரெஞ்சு அரசின் சார்பிலான தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.

காரைக்கால்,

இப்பள்ளியில், காரைக்கால் மாவட்டத்தில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட 60-க்கு மேற்பட்டோர் கடந்த பல ஆண்டுகளாக படித்துவந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வந்ததையடுத்து இப்பள்ளியை மூட பிரெஞ்சு அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. . இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஷான் ஈவ் லெக்கோந்த் நேற்று காரைக்கால் பிரெஞ்சு பள்ளிக்கு வந்தார். அவரை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பிரெஞ்சு முன்னாள் ராணுவ சங்கத்தினர் சந்தித்து பள்ளியை மூடக்கூடாது. தொடர்ந்து நடத்தவேண்டும் என மனு வழங்கினர்.

மனுவை படித்துபார்த்த எம்.பி, இது குறித்து, பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவு தூணில், எம்.பி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Next Story