மாநிலத்தில் கடந்த ஆண்டு ரூ.545 கோடி வருமான வரி வசூல் முதன்மை ஆணையர் தகவல்


மாநிலத்தில் கடந்த ஆண்டு ரூ.545 கோடி வருமான வரி வசூல் முதன்மை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 5:31 AM IST (Updated: 25 July 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு ரூ.545 கோடி வருமான வரி வசூலாகி இருப்பதாக முதன்மை ஆணையர் ஜகான்சீப் அக்தர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

வருமான வரித்துறை சார்பில் வருமான வரி தினம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஜகான்சீப் அக்தர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரியில் 1963-ம் ஆண்டு வருமான வரி நடைமுறைக்கு வந்தபோது 5 ஆயிரம் பேர் தான் வரி செலுத்தினர். அப்போதைய வருவாய் ரூ.10 லட்சம் தான். ஆனால் தற்போது 2.2 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ரூ.545 கோடி வருமான வரி வசூலாகி உள்ளது. நடப்பு ஆண்டில் வருமான வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கடந்த ஆண்டு அதிகமாக வருமான வரி செலுத்திய பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கலெக்டர் அருண் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வருமான வரித்துறை இணை ஆணையர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Next Story