திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவண்ணாமலையில் நடக்கிறது. இதில் கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்கிறார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல பொறுப்பாளர்கள் எஸ்.சிவராஜ், என்.ஜி.பார்த்திபன், அமைப்பு செயலாளர் சி.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம், தெற்குமாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இது சம்பந்தமாக திருவண்ணாமலை மத்திய, தெற்கு மாவட்ட அ.ம.மு.க. ஆலோசனைக்கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர , பேரூராட்சி, வட்டம், ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் ஏ.ஜி.பஞ்சாட்சரம், எஸ்.ஆர்.தருமலிங்கம் ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story