படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோளத்திற்கு இழப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்
படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள பயிருக்கான இழப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் குழு காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் பணியின் போது உயிரிழந்தால் அந்த காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு மத்திய-மாநில அரசுகளை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். அரசு அறிவித்தபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள பயிரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும். அரசு பொது இ-சேவை மையத்தில் விவசாயிகள் இ-அடங்கல் பெறும் முறையை நடைமுறைத்தப்படுத்த வேண்டும். செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காயம் குளிர்பதன கிடங்கில் மின்வசதியை உடனடியாக ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றார்.
காவிரி தண்ணீர்
விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடு நடைபெறாமல் செயல்படுத்த வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசுகையில், மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து காவிரி தண்ணீரை துறையூர் வழியாக கால்வாய் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து பணிகளில் ஏரி, குளங்களின் வரத்து வாய்க்கால்களையும், மதகுகளையும் சீரமைக்க வேண்டும். பிறப்பு-இறப்பு சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும், என்றார்.
விவசாயி ராஜூ பேசுகையில், கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்க மானியம் வழங்க வேண்டும். வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும், என்றார். பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் பேசுகையில், குன்னம் தாலுகா துங்கபுரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் உள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும், என்றார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் வழங்க வேண்டும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு விரைவு பஸ்கள், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. பயிர் காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல மின்கம்பங்கள் சாய்ந்தன. அவற்றை மழைக்காலம் வருவதற்குள் சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், என்றார்.
வறட்சி மாவட்டம்
விவசாயி பெருமாள் பேசுகையில், போதிய மழையின்மை காரணமாக பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும், என்றார். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், கொட்டரை நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். சின்ன முட்லு அணையை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளங்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story