திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 15-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 15-வது பட்டமளிப்பு விழா நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
திருச்சி,
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நாளை(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் பத்மஸ்ரீ சுப்ரா சுரேஷ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் மொத்தம் 1,636 மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள்.
மேலும் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவரான ரூபேஷ் குப்தாவிற்கு குடியரசுத்தலைவர் பதக்கமும், 9 பி.டெக், 1 பி.ஆர்க், 21 எம்.டெக், 4 எம்.எஸ்சி, 1 எம்.சி.ஏ. மற்றும் 1 எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு நிறுவன பதக்கமும் வழங்கப்பட இருக்கிறது. எம்.டெக், டேட்டா அனாலிடிக் துறை மாணவ-மாணவிகள் முதல் முறையாக பட்டம் பெறுகிறார்கள்.
தேசிய தொழில்நுட்ப கழகங்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும், இந்திய பொறியியல் கல்லூரிகளில் 10-வது இடத்தையும், ஆர்க்கிடெக்ச்சர் பிரிவில் 7-வது நிறுவனமாகவும், மேலாண்மை துறையில் 17-வது இடத்தையும் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் பெற்று திகழ்கிறது. மேலும் இந்நிறுவனம் ஒட்டுமொத்த தரவரிசையில் 24-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆசியாவில் 211-வது இடத்திலும், பிரீக்ஸ் நாடுகளின் ‘கியூஎஸ்’ தரவரிசையில் 126-வது இடத்திலும் இருக்கிறது.
95 சதவீதம் வேலைவாய்ப்பு
தேசிய தொழில்நுட்ப கழகங்களில் சேர்க்கையை ஒருங்கிணைந்து நடத்த திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கத்தான்-2019 நடத்தவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் கணிதத்துறையில் எம்.எஸ்சி. படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் வணிக பொறியாளர் மற்றும் தொழில் முனைவோர் படிப்பையும் தொடங்குகிறது. இந்த பிரிவுகளில் பாடங்களை முன்னாள் மாணவ-மாணவிகளை கொண்டே கற்பிக்கப்படும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘இஸ்ரோ’ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
243 முன்னணி நிறுவனங்கள் வளாகத்திற்கு வந்து சுமார் 95 சதவீத மாணவ-மாணவிகளை தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி சென்றுள்ளன. ஆண்டு வருமானத்தை சுமார் ரூ.25 லட்சத்தை 10 நிறுவனங்களுக்கு மேலாக அளிக்கின்றன. அதிக பட்ச ஊதியமாக ரூ.35 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. சராசரி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது டீன் உமாபதி (ஆராய்ச்சி மற்றும் கன்சல்டிங்), ஒருங்கிணைப்பாளர் அசோகன், வேலைவாய்ப்பு அதிகாரி(பயிற்சி) பக்தவச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story