பெங்களூருவில் யானை தந்தங்களை விற்க முயன்ற 2 பேர் கைது
பெங்களூரு நந்தினி லே-அவுட், எப்.டி.ஐ. சர்க்கிள் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய 2 பேர் முயற்சிப்பதாக நந்தினி லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகித்திற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. உடனே அவர், சக போலீஸ்காரர்களுடன் அங்கு விரைந்து சென்றார்.
பெங்களூரு,
எப்.டி.ஐ. சர்க்கிளில் உள்ள கடையின் முன்பாக சாக்கு பையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்ட போது, 2 யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
விசாரணையில், அவர்கள் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த நாகராஜ நாயக் (வயது 44), நாகராஜ்(33) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரிடமும் கனகபுரா அருகே நிடகல் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்பவர் யானை தந்தங்களை விற்பனை செய்ய கோரி கொடுத்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வசந்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story