அவுட் லுக் - ஐேகர் நிறுவனம் ஆய்வு: புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு 11-வது இடம்


அவுட் லுக் - ஐேகர் நிறுவனம் ஆய்வு: புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு 11-வது இடம்
x
தினத்தந்தி 27 July 2019 4:18 AM IST (Updated: 27 July 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-வது இடத்தை பிடித்துள்ளது.

புதுச்சேரி,

அவுட்லுக்-ஐகேர் என்ற நிறுவனம் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அண்மையில் அந்த நிறுவனம் வெளியிட்ட இந்திய பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதுவை பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க வகையில் தனது தகுதி புள்ளிகளை அதிகரிக்க செய்திருக்கிறது.

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் 11-வது இடமும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 67-வது இடமும் பெற்றுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பெண் 68.58 சதவீதமாகும்.

மாணவர்-ஆசிரியர் விகிதம், முனைவர் பட்டம்பெற்ற ஆசிரியர் விகிதம், ஆசிரியர்-கட்டுரை விகிதம், கட்டுரை-மேற்கோள் விகிதம், ஏற்பு-பல்வகைமை, முதன்மை அளவுகோல்களில் பெற்ற புள்ளிகள், அவற்றின் மூலஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் அவுட்லுக்-ஐகேர் நிறுவனம் இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசையை கணக்கிடுகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடும் தேசிய நிறுவன தகுதி வரைவுக்கு அடுத்து அவுட்லுக்-ஐகேர் இந்திய பல்கலைக்கழக தரவரிசையை நிர்ணயிக்கும் முக்கிய வரைவாகும்.

புதுவை பல்கலைக்கழகம் பல்வேறு தகுதி வரைவுகளில் பங்கேற்று செயல்பாட்டை மேம்பட செய்துள்ளது. துணைவேந்தர் குர்மீத் சிங்கின் தொலைநோக்கு தலைமையும், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும், எதிர்வரும் காலங்களில் ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் சிறந்த கல்விச்சூழலை அளித்து புதுவை பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சி பெறும். அந்த வளர்ச்சியின் மூலம் பல புதிய உச்சங்களை தொட முயன்று வருகிறது.

மேற்கண்ட தகவல்கள் புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story