காவல் துறையை நவீனப்படுத்த ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - நாராயணசாமி தகவல்
காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
மத்திய அரசு அனைத்து அவசர கால உதவிகளுக்கும், ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. அதன்படி ‘112’ என்ற எண்ணை அனைத்து அவசர உதவிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ‘112’ அவசர கால உதவி எண் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ‘112’ அவசர கால உதவி சேவை மையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை, கோரிமேட்டில் உள்ள போலீஸ் மைதானத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீயணைப்பு-101, ஆம்புலன்ஸ்-108, பெண்கள் குழந்தைகள் பராமரிப்பு-181 ஆகியவை ஒருங்கிணைந்த அவசர கால கட்டுப்பாட்டு அறையாக இதுநாள் வரை செயல்பட்டு வந்தது. இனி 112’ அவசர கால உதவி எண் கட்டுப்பாட்டு மையமாக செயல்படும்.
இந்த அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்-அமைச்சர் நாராயணசாமி, நேற்று தொடங்கி வைத்த பார்வையிட்டார். அப்போது அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதையடுத்து அதே கட்டிடத்தில் உள்ள சைபர் கிரைம் மற்றும் பயிற்சி மையம், போக்குவரத்து விழிப்புணர்வு கல்வி நிறுவனத்தின் போக்குவரத்து மேலாண்மை பிரிவு, காவலர்களுக்கான தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி ஆகியோர் புதிதாக 3 அவசர கால ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரி காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தின் காவல்துறையை நவீனப்படுத்தவும், புதிய காவல் நிலையங்கள் கட்டவும், பழைய காவல் நிலையங்களை சீரமைக்கவும், ஆயுதங்கள் வாங்கவும் மத்திய அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையேற்று முதற்கட்டமாக ரூ.60 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களை 90 சதவீதம் பேர் நல்ல செயலுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் பேர் தீய செயலுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த தீய செயல்களை தடுப்பதற்காக புதுச்சேரியில் தனியாக சைபர் கிரைம் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. இதுபோன்ற நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மீட்க மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 3 அவசர கால வாகனங்கள் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர் குமார் யாதவ், கூடுதல் செயலர் சுந்தரேசன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story