அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும்; முதல்-அமைச்சரிடம், இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை


அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும்; முதல்-அமைச்சரிடம், இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு சார்புநிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியைவழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.

புதுச்சேரி,

 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்மாநில செயலாளர்சலீம், தலைமையில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன்,துணை செயலாளர் அபிஷேகம்,ஏ.ஐ.டி.யு.சி.பொதுச்செயலாளர்சேதுசெல்வம்மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை முதல்-அமைச்சர்நாராயணசாமியை சட்டசபைவளாகத்தில் அவரது அறையில்சந்தித்து கோரிக்கைமனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கடந்த 2011 முதல் 2016-ம்ஆண்டு வரை ஆட்சி புரிந்தவர்களின்நிர்வாக சீர்கேட்டினாலும், முறைகேடுகளாலும் அரசு மற்றும்அரசு சார்புநிறுவன ஊழியர்கள்பணி பாதுகாப்புஇல்லாமலும், சம்பளம் இல்லாமலும் பரிதவித்து வருகின்றனர்.

2013-ம்ஆண்டு முதல்பணிஓய்வுபெற்றவர்களுக்கு பணிக்கொடைவழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஜனநாயகமுறைப்படி போராட்டமுறையை தேர்ந்தெடுத்தனர்.இதனை தொடர்ந்துஅரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி,சம்பள பாக்கியைதருவாகஉறுதி அளித்தது. இது தொடர்பான கோப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர்எந்த கோப்பும்வரவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கவர்னர் மாளிகை முன்பு 34 கோரிக்கைகளுடன் உங்கள் தலைமையில்தர்ணா போராட்டம்நடத்தப்பட்டது.இந்த கோரிக்கைகளில்முக்கியமானகோரிக்கை சம்பள பிரச்சினையாகஇருந்தது. தற்போது இதுசமூக பிரச்சினையாகமாறியுள்ளது.

அரசு நிறுவனங்களின் வியாபார நசிவுக்கு என்ன காரணம்?. குளறுபடி எப்படி நடந்தது? என்று கண்டறிந்து திறமையுள்ள,அர்ப்பணிப்பு தன்மைஉள்ள தலைமைஅதிகாரிகளை நியமித்து நிதி மூலதனம்வழங்கி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்பள பாங்கியையும்,ஓய்வூதிய பலன்களையும்வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story