திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. எதிரில் மாணவர்கள், பெற்றோர்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. எதி ரில் மாணவர்கள், பெற்றோர் களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை,
ஜமுனாமரத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரு கிறது. இது மலைவாழ் இனத்தை சேர்ந்த மாணவர் களுக்கான ஐ.டி.ஐ. ஆகும். இதில் 152 மாணவர்கள் படிக்கும் வகையில் இடங்கள் உள்ளன. இதற்கு தற்போது வரை 26 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து உள்ளனர்.
இதனால் மற்ற இடங்களை பூர்த்தி செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது பிரிவை சேர்ந்த மாணவர் களையும் அந்த ஐ.டி.ஐ.யில் சேர்த்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு ஐ.டி.ஐ. முதல்வர் செல்வராஜூக்கு உயர் அதி காரிகள் மூலம் உத்தரவு வந்து உள்ளது.
இதையடுத்து ஜமுனா மரத்தூர் அரசு ஐ.டி.ஐ.க்கான மாணவர் சேர்க்கை விண்ணப் பங்கள் வழங்கப்பட்டன. இதில் 864 பேர் கலந்தாய்வுக்கு வர சொல்லி அழைப்பாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அழைப்பாணை பெறப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்தாய்விற்காக திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ.க்கு வந்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஜமுனாமரத்தூர் அரசு ஐ.டி.ஐ.யில் மலைவாழ் இன மாணவர்கள் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் மூலம் அறிவிப்பு வந்து உள்ளது.
இந்த தகவலை நேற்று காலை கலந்தாய்விற்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் ஐ.டி.ஐ. முதல்வர் மற்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. எதிரில் போளூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந் ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது மறியலில் ஈடுபட்ட வர்கள், எங்களுக்கும் ஐ.டி.ஐ. யில் படிக்க இடம் அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென் றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Related Tags :
Next Story