உப்புக்கோட்டை அருகே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
உப்புக்கோட்டை அருகே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உப்புக்கோட்டை,
தேனி மாவட்டம் போடி தாலுகாவில் உப்புக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. தேவாரம் அருகே அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு உப்புக்கோட்டை-போடி சாலை வழியாக தான் சென்று வர முடியும். இதே சாலை வழியாக தான் தேவாரத்துக்கும் செல்ல வேண்டும். உப்புக்கோட்டை வழியாக தேவாரம் சென்றால் விரைவாக சென்றுவிடலாம் என்பதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் இந்த சாலையை தான் பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உப்புக்கோட்டை-போடி சாலை அகலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் புதிதாக பாலங்களும் கட்டப்பட்டன. அதன்படி டொம்புச்சேரி பகுதியில் டொம்பச்சியம்மன் குளத்தின் குறுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலமும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து வருகிறதோ? என்ற அச்சம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனேயே கடந்து செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பாலத்தில் உள்ள சாலையின் விரிசலும் பெரிதாகிக்கொண்டே போகிறது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story