மாவட்ட செய்திகள்

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் + "||" + The Marxist Communist Party (TMC) to repeal the new education policy

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் முத்துப்பேட்டையில் நடந்தது.
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரைவு தேசிய புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கனகசுந்தரம், வீரமணி, வீரசேகரன், ராஜேந்திரன், மாதர் சங்க தலைவர் தேவகி, கிளை செயலாளர் காளிமுத்து ஆகியோர் வரைவு தேசிய புதிய கல்வி கொள்கை பாதிப்பு குறித்து பேசினர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கையெழுத்து பெற்றனர். மேலும் ஆசாத்நகர், பெரியக்கடை தெரு, பேட்டை ஆகிய இடங்களில் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரசாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
2. நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்
நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் பேசியுள்ளார்.
3. திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.
5. திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இருசக்கர வாகன பிரசாரம்
திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.