ஆற்றங்கரையில் காவலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
ஆற்றங்கரையில் தென்னந்தோப்பு ஒன்றில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் அழகன்குளம் அருகே உள்ள ஆற்றங்கரையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக முனீசுவரன்(47) என்பவர் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கிணறு வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், ராஜலட்சுமி என்ற மகளும், கருப்புச்சாமி, முத்துக்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர். முனீசுவரன் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென்னந்தோப்பில் உள்ள குடிசையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு முனீசுவரன் தென்னந்தோப்பில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மறுநாள் அவருடன் கிணறு வெட்டும் தொழிலாளி ஆற்றங்கரையை சேர்ந்த ஹாஜாமைதீன் என்பவர் அழைப்பதற்காக அங்கு சென்றபோது முனீசுவரன் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு கொடுத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் ஆகியோரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இறந்த முனீசுவரனின் அண்ணன் மகன்கள் அழகன்குளம் செட்டிபனையை சேர்ந்த சசிக் குமார்(28), இவரது தம்பி சுரேஷ்(25), இவர்களது மைத்துனர் சாமிதோப்பு பகுதியை சேர்ந்த கண்ணன்(38) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக முனீசுவரனை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா விசாரணை மேற்கொண்டபோது இவர்கள் 3 பேரும் அருகில் நின்று கொண்டிருந்தனராம். அப்போது பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தேகத்தின் பேரில் இவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் தான் குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்ததுடன் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

Related Tags :
Next Story