அச்சு முறிந்து கவிழ்ந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வங்கி நகை மதிப்பீட்டாளர் சாவு


அச்சு முறிந்து கவிழ்ந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வங்கி நகை மதிப்பீட்டாளர் சாவு
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

அச்சு முறிந்து கவிழ்ந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், புகளூர் காகித ஆலை செக்கு மேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). இவர் புன்னம்சத்திரத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வேலாயுதம்பாளையம்-புன்னம்சத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பாண்டிபாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண் டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் அச்சு முறிந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக சிவக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

நகை மதிப்பீட்டாளர் சாவு

இதில் மோட்டார் சைக் கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் படுகாய மடைந்த சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்மூலிமங்கலத்தை சேர்ந்த ராஜலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story