அதிகாரி மீது மை தெளித்த 2 கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் கைது
மும்பை சயானில் உள்ள மராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாாியத்தில் அதிகாரியாக இருப்பவர் அமர் சுபாதே (வயது 54).
மும்பை,
கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ருக்சனா சித்திக் (43) மற்றும் அக்தர் அப்துல் குரேஷி (52) ஆகியோர் சம்பவத்தன்று தங்கள் ஆதவாளர்களுடன் அமர் சுபாதேயை சந்திக்க வந்தனர். அப்போது அவர்கள் மான்கூர்டு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் குறித்து அதிகாரியிடம் பேச வந்ததாக தெரிகிறது. இதில் அவர் அதிகாரியிடம் பேசி கொண்டு இருந்த போது திடீரென மையை தெளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சயான் போலீசார் 2 கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story