திருவண்ணாமலையில் ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு


திருவண்ணாமலையில் ‘ஜல்சக்தி அபியான்’ திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 July 2019 5:00 AM IST (Updated: 28 July 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஜல்சக்தி அபியான்’ - நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக நீரின் பாதுகாப்பு, சேமிப்பு குறித்து பல்வேறு திட்டப்பணிகள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவதற்கும், மழைநீர் சேகரிப்பதற்கும், ஏரி, குளங்கள், அணைக்கட்டுகள், ஆறுகள் சீரமைக்கவும், புனரமைக்கவும், சுத்தம் செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை - நீர் வள ஆதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலமாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ‘ஜல்சக்தி அபியான்’ - நீர் மேலாண்மை திட்டத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, ஏரி, குளங்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், கலசபாக்கம், போளூர், ஜவ்வாதுமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story