மாணவிகளிடம் சில்மிஷம்: பவானி அரசு பள்ளிக்கூட ஆசிரியர் பணியிடை நீக்கம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை


மாணவிகளிடம் சில்மிஷம்: பவானி அரசு பள்ளிக்கூட ஆசிரியர் பணியிடை நீக்கம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பவானி அரசு பள்ளிக்கூட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.

பவானி,

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). இவர் பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது சக்திவேல், பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிகள் சிலரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பவானி அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி நடவடிக்கை எடுத்துள் ளார்.

மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story