ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள தேளூரில் களிச்சக்குட்டை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள தேளூரில் களிச்சக்குட்டை என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் தலைமையில் அதிகாரிகள் தேளூர் கிராமத்துக்கு சென்று நில அளவையர்களை வைத்து அளந்து ஆக்கிரமிப்புக்களை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றினர். தொடர்ந்து ஏரியை சுற்றி கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story